புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பெண்ணாக பிறந்தவளுக்கு தாய்மை என்பது மிகப்பெரிய வரம். ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அப்படியிருக்கையில் கர்ப்பமான பிறகு தனது தோற்றத்தை எண்ணி டென்சன் ஆனேன் என்று கூறியிருக்கிறார் கரீனா கபூர்.
சமீபத்தில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில், கர்ப்பமான பிறகு எனது தோற்றத்தை பார்த்து டென்சன் வந்தது. இருந்தாலும் எனது தோற்றத்தை ரசிகர்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன். கர்ப்பகாலத்திற்கு பிறகு என்ன மாதிரி உடல்மாற்றம் ஏற்படும் என்று தெரியாது. அதேசமயம் நான் பழைய உத்வேகத்துடன் மகிழ்ச்சியாக உள்ளேன். அதை ஏற்கும் மனநிலையில் இருக்கிறேன். கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தில் என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. எனது பழைய தோற்றத்திற்கு வர சில காலம் ஆகும் என்று கூறியிருக்கிறார்.
கரீனா அடுத்தப்படியாக ‛வீரே தி வெட்டிங்' என்ற படத்தில் நடிக்கிறார். தற்போது அவரது உடல்தோற்றம் மாறியிருப்பதால் நடிக்க முடியாத வருத்தத்தில் இப்படியெல்லாம் கூறியிருக்கிறார்.