மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
நாகார்ஜுனாவின் மகன் என்று சொல்வதை விட சமந்தாவின் வருங்காலக் கணவர் நாக சைதன்யா என்றால் தமிழ் ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். தமிழில் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நாக சைதன்யா 'துருவங்கள் 16' பட இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்து தமிழில் இயக்க உள்ள 'நரகாசுரன்' படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'துருவங்கள் 16' படம் கடந்த வருடம் வெளிவந்த படங்களில் லாபகரமான படமாக அமைந்தது. இன்று 50வது நாளைத் தொட்டுள்ள இப்படத்தைப் பற்றிப் பாராட்டாத திரைப் பிரபலங்களே இல்லை. 'துருவங்கள் 16' படத்தின் தொலைக்காட்சி உரிமை சுமார் 80 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். இப்படத்தை வாங்கிய அமைனவருக்குமே படம் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது முதல் படத்திலேயே வித்தியாசமான இயக்குனர் எனப் பெயரெடுத்துள்ள கார்த்திக் நரேன் தன்னுடைய அடுத்த படமாக 'நரகாசுரன்' படத்தை ஏற்கெனவே அறிவித்துள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் 'நரகாசுரன்' படத்தின் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.