பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மும்பையில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர் ஹன்சிகா. ஆரம்ப காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமா உலகம் தனக்கு புதிது என்பதால் தனது அம்மா மோனா மோத்வானியையும் கூடவே வைத்திருந்தார் ஹன்சிகா. ஆனால், ஒருகட்டத்தில் இங்குள்ள சினிமா உலகினர் நண்பர்களாக மாறிய பிறகு அவர், எந்தவித துணையும் இன்றி மும்பையில் இருந்து தனது உதவியாளருடன் வந்து தமிழ்ப்படங்களில் நடித்து விட்டு செல்கிறார்.
மேலும், தற்போது அவரது தமிழ் சினிமா மார்க்கெட் திருப்திகரமாக இல்லை என்பதால் தெலுங்கில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது மலையாள சினிமா பக்கம் ஹன்சிகாவின் கவனம் திரும்பியுள்ளது. அதோடு, மலையாள படங்கள் மற்ற மொழிப்படங்களில் இருந்து மாறுபட்டது என்பதால் அதுபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் தற்போது மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி நடித்த சில சூப்பர் ஹிட் படங்களை பார்த்து ரசித்து வருகிறார் ஹன்சிகா.