'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிங்கம்-3 படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் சூர்யா. சூர்யா - ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான சி3 கடந்தவாரம் வெளியானது சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த இப்படத்தில் சத்தம் அதிகம் இருந்தால் படத்தின் திரைக்கதை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகருவதால் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலால் படத்தின் வசூல் பாதிப்படைந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
இந்நிலையில் சி3 படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக கூறி ஹீரோ சூர்யா, இயக்குநர் ஹரிக்கு டொயோட்டா “Fortuner “ காரை பரிசாக வழங்கி தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். சூர்யாவுடன் 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியனும் உடனிருந்தார்.