ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேஸ்ட்மேன், ஜாம்பவான்... இன்னும் என்னென்ன பட்டங்கள் எல்லாம் பொருந்துமோ அது அனைத்திற்கும் சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகள் ஏராளம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் சச்சின். இவரது வாழ்க்கை இப்போது ‛சச்சின் : ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. இதில் சச்சின் ரோலில் அவரே நடிக்கிறார். ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து ரவி தயாரிக்கிறார். சச்சின் சின்ன வயது முதல் அவர் கடந்து வந்த பாதையை இப்படம் விவரிக்க உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சச்சின் படம் வருகிற மே 26ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சச்சினே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.