'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜூனியர் என்.டி.ஆர் தனது சகோதரரும், நடிகருமான கல்யாண் ராம் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகின்றது. ஆக்ஷன் திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தை இயக்குனர் பாபி இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஏற்கவிருக்கும் மூன்று வேடங்களுக்கும் மூன்று நாயகிகளை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே ராக்ஷி கண்ணா மூன்று நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை நாயகிகளாக ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஜெய் லவகுச என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பூஜை பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற்றது. ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.