ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்தப்படியாக வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை இயக்கி வருகிறார். இதுத்தவிர இன்னும் ஒரு படத்தையும் இயக்குகிறார். சந்தீப் மற்றும் விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் ஹீரோயினாக தமிழில் களமிறங்குகிறார்.
வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார். படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி. “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்த நிலையில் படத்தை தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி படத்திற்கு அறம் செய்து பழகு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதை நடிகர் ஜெயம் ரவி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ஆக்ஷ்ன் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகிறது. 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.