மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
தழுக், மொழுக்கென்று வலம் வந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு தெய்வ பக்தி அதிகமாம். ஆன்மிகத்தில் அதிக நாட்டத்துடன் இருக்கும் ஹன்சிகா, காரில் செல்லும்போது வழியில் கோவில் வந்தால் உடனே கை கூப்பி, கண் மூடி, சாமி கும்பிடுகிறார். பிறகு சாமிக்கு ஒரு பறக்கும் முத்தமும் கொடுப்பார். ஹன்சிகா பக்திமான் மட்டுமல்ல மனிதநேயம் உள்ள பொண்ணும் கூட. ஒரு முறை ஷூட்டிங் போகிற வழியில் யாரோ அடிபட்டுக் கிடக்க நமக்கென்ன என்று போகாமல் அவரை மருத்துவமனையில் சேர்த்து, அவரது வீட்டிற்கும் தகவல் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே அம்மணியை நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க, குஷ்பூ மாதிரி இருக்கீங்கன்னு ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளுகிற நேரத்தில், இப்படியரு செய்தி வெளியாகி மேலும் ஹன்சிகாவுக்கு புகழ்சேர்த்திருக்கிறது.