தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ‛பாகுபலி'. சரித்திர பின்னணியில் உருவான இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸையே திரும்பி பார்க்க வைத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் படப்பிடிப்புகள் முடிந்தது. சுமார் 30 ஸ்டுடியோக்களில் பாகுபலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.
பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், இப்போது சர்ப்ரைஸாக நடிகர் ஷாரூக்கானும் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஷாரூக்கானிடம் பேசிவிட்டதாகவும், அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் விரைவில் ஷாரூக்கான் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.