‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்த கரீனா, மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். அவர் அடுத்தப்படியாக ‛வீரே தி வெட்டிங்' படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. வீரே தி வெட்டிங் படத்தில் கரீனா, கர்ப்பமான பெண்ணாக நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அந்த கேரக்டரில் அவர் நடிக்கவில்லையாம், அவரது கேரக்டரை வேறு மாதிரி கொஞ்சம் மாற்றியிருக்கிறாராம் இயக்குநர். அந்த ரோல் என்ன என்பது விரைவில் தெரியவரும். சஷாங் கோஷ் இயக்க உள்ள இப்படத்தில் கரீனா தவிர்த்து சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். ‛வீரே தி வெட்டிங்' படம் இந்தாண்டு இறுதியில் வெளியாக உள்ளது.