பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அகடம் என்ற படத்தை இயக்கியவர் இசாக். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கின்னஸ் சாதனை படைத்தது. அவர் தற்போது இயக்கும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம் நாகேஷ் திரையரங்கம். நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி ஹீரோவாக நடிக்கிறார். ஆஸ்னா ஜவேரி ஹீரோயின். இவர்கள் தவிர காளிவெங்கட், சுவாமிநாதன், லதா, சித்தாரா ஆகியோரும் நடிக்கிறார்கள். ட்ரான்ஸ் மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. எம்.எஸ்.பிரபு, நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்கிறார்கள். ஸ்ரீ இசை அமைக்கிறார்.
தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இது ஒரு தியேட்டரை மையமாக கொண்டு நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. திகில் பாதி காமெடி மீதி என்ற வகையில் தயாராகி வருகிறது. சென்னை புறநகரில் தியேட்டர் ஷெட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் ஹீரோ ஆரியின் பிறந்த நாளையட்டி இன்று இயக்குனர் அமீரும், கரு.பழனியப்பனும் வெளியிட்டார்கள்.