'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மலையாளப்படம் ஒரு யாத்ராமொழி. பிரதாப் போத்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதையை இயக்குனர் பிரியதர்ஷன் எழுதியிருந்தார். சிவாஜியுடன் மோகன்லால், நெடுமுடி வேணு, ரஞ்சிதா, சோமன், பிரகாஷ்ராஜ், பாரதி உள்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைதிருந்தார்.
1997ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவாஜி ஆனந்த சுப்பிரமணியம் என்ற தமிழராக நடித்திருந்தார். படம் முழுக்க தமிழ் வசனங்களையே பேசியிருப்பார். இப்போது இந்தப் படத்தை ஓம் ஜெயம் தியேட்டர்ஸ் சார்பில் தீபக்குமார் பயணத்தின் மொழி என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார். அதோடு படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் மாற்றப்படுகிறது. தமிழ் வசனத்தை புதியங்கம் முரளி எழுதியுள்ளார். சிவாஜி தவிர மற்ற அனைத்து கேரக்டர்களுக்கும் டப்பிங் வாய்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில் படம் வெளிவருகிறது.