ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்பெல்லாம் ஒரு படத்திற்கான பூஜை போடும்போதே படத்தின் தலைப்பை வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல. படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியிடும்போதுதான் தலைப்பையே வெளியிடுகிறார்கள். அதுவரைக்கும், விஜய் -61, அஜீத் -57 என்றுதான் படங்களை குறிப்பிட வேண்டிய நிலை உள்ளது. காரணம் கேட்டால், கதைக்கு பொருத்தமான தலைப்பு கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கு நடுவே டைட்டீல் பரிசீலணை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
அதேபோல், தற்போது வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் அவரது 53-வது படமும் தற்போது விக்ரம் -53 என்றே அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படத்திற்கு ஏற்கனவே கெட்ச் என்றொரு தலைப்பை ரெடி பண்ணி விட்டார்கள். ஆனால், அது ஆங்கிலமாக இருப்பதால் தமிழில் எளிதில் மக்களை போய் சேரும் நல்ல தலைப்பாக யோசித்து வருகிறார்களாம். அதோடு உடனடியாக டைட்டீலை அறிவித்து விட்டால் நார்மலாகி விடும் என்பதால் தற்போதைய பாணியில் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து வெளியிடப்போகிறார்களாம். அந்தவகையில், விக்ரமின் இந்த புதிய பட தலைப்பை பர்ஸ்ட் லுக்குடன்தான் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.