Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1 கோடி ஹிட்ஸில் 'ரெமோ - செஞ்சிட்டாளே..' பாடல்

11 பிப், 2017 - 18:02 IST
எழுத்தின் அளவு:
Remo---senjitaley-song-joints-in-1-crore-club

இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அவருடைய பாடல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். குறுகிய காலத்திலேயே புகழைப் பெற்றுவிட்ட அனிருத்தின் இசையில் வெளிவரும் படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகமாக இல்லையென்றாலும் கூட சில பாடல்கள் சூப்பர் ஹிட் ரகத்தில் சேர்ந்து விடுகிறது.


அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த 'ரெமோ' படத்தில் இடம் பெற்ற 'செஞ்சிட்டாளே...' பாடல் இடம் பிடித்துள்ளது. யு டியூபில் இந்தப் பாடலை இதுவரை 1 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'ரஜினி முருகன்' படத்தில் இடம் பெற்ற 'உன் மேல ஒரு கண்ணு..' பாடலை யு டியூபில் இதுவரை 2 கோடியே 74 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.


அனிருத் இசையமைத்து வெளிவந்த படங்களில் 'வேதாளம்' படத்தில் இடம் பெற்ற 'ஆலுமா..டோலுமா' பாடல் வீடியோ, லிரிக் வீடியோ இரண்டும் சேர்த்து 3 கோடி பார்வைகளைப் பெற்றது. 'கத்தி' படத்தில் இடம் பெற்ற 'செல்ஃபி புள்ள' பாடல் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம் பெற்ற 'வாட் எ கருவாடு, ஊதுங்கடா சங்கு” ஆகிய பாடல்கள் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளன. 'மாரி' படத்தில் இடம் பெற்ற 'தர லோக்கல்' பாடல் 1 கோடியே 60 லட்சம் பார்வைகளையு, 'டானு டானு' பாடல் 2 கோடியே 90 லட்சம் பார்வைகளையும் பெற்றது.


1 கோடி பார்வை பாடல்கள் கிளப்பில் அனிருத் இசையமைத்த பாடல்கள்தான் அதிகமாக உள்ளன. அவரின் ஒய் திஸ் கொலவெறி தான் யூ-டியூப் ஹிட்ஸை துவக்கி வைத்தது என்பது ஹைலைட்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in