ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது இவர் ‛பில்லாரி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். தில்ஜித், அனுஷ்கா முக்கிய ரோலில் நடிக்கின்றனர், அன்சாய் லால் இயக்குகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தை, அனுஷ்காவின் காதலரான விராட் கோலி தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை கேட்ட அனுஷ்கா மிகவும் டென்ஷனாகிவிட்டார், இதுதொடர்பாக அவர் ஒரு கோபமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனுஷ்கா கூறியதாவது... "பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன் அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்தியால் எனக்கு அவர்கள் மீது கோபம் வருகிறது. தயாரிப்பாளர் ஆவது என் கனவு. இதுபோன்ற செய்திகள், என் கடின உழைப்பையும் எனது திறமையும் அவமதிப்பது போல் இருக்கிறது. நான் அமைதியாக இருப்பதினால் அதை பலவீனமாக எண்ண வேண்டாம். செய்திகள் வெளியிடுவதற்கு முன் என்னிடமோ அல்லது என் படக்குழுவிடமோ கேட்டு கொள்ளுங்கள். அடுத்தவர்கள் திறமையை வைத்து விளையாட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
பில்லாரி படம் வருகிற, மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது