பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சாதாரண மக்கள்தான் செல்ஃபி மோகத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால், பிரபலங்கள் பலரும் செல்ஃபி மோகத்தில் இருக்கிறார்கள். சீனியர் நடிகையான ஸ்ரீதேவி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டே இருப்பார். அவரைப் போலவே அவருடைய மகள் ஜான்வியும் அவருடைய சமூக வலைத்தத்தில் அவருடைய செல்ஃபி புகைப்படங்களை அதிகம் பதிவிடும் பழக்கம் உடையவர்.
ஜான்வி விரைவில் ஹிந்தித் திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்னர் மகளின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியாவது ஸ்ரீதேவிக்குப் பிடிக்கவில்லையாம். அடிக்கடி செல்ஃபி எடுத்து படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என மகளிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். அதற்கு ஜான்வியும் சரியனெ சம்மதித்துவிட்டாராம்.
பாலிவுட் வட்டாரங்களில் இதுதான் தற்போது அதிகப்படியான பேச்சாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அம்மா புகைப்படங்களைப் பதிவிடுவதை குறைத்துக் கொண்டாலே மகளும் குறைத்துக் கொள்வாரே என சிலர் கிண்டலடிக்கிறார்களாம்.