'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் ஆண்டனி என்றாலே சீரியஸ் நடிகர் என்றாகி விட்டது. அவர் ஹீரோவாக நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் என 6 படங்களில் நடித்து விட்டார். இந்த படங்களில் இந்தியா பாகிஸ்தானில் காமெடிக்கு டிரைவ் பண்ணினார். ஆனால் அது பெரிதாக ஒர்க்அவுட்டாகவில்லை. அதேபோல், ஓரளவு ரொமான்ஸ் காட்சிகள் என்பது அவரது எல்லா படங்களிலுமே இருந்தது. ஆனால், அந்த ரொமான்ஸை விட அவர் நடித்த சீரியசான நடிப்புதான் ரீச்ஆனது.
அதனால், இப்போது ஒட்டுமொத்த சீரியசையும் கலந்து எமன் படத்தில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு சாதாரணமான இளைஞன் அரசியலுக்கு வரும் கதை இது. அவர் எப்படி தனது மதிநுட்பத்தினால் எதிரிகளை வீழ்த்துகிறார் என்பதை ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார் டைரக்டர் ஜீவா சங்கர். அதனால் இந்த படம் விஜய் ஆண்டனியை அதிரடியான மாஸ் ஹீரோவாக நிறுத்தும் வகையில் உருவாகியிருக்கிறது.
அதோடு, இது தனக்கு பிடித்தமான ஆக்சன் ரூட் என்பதால் இனிமேல் இந்த மாதிரியான கதைகளுக்கே முதலிடம் கொடுக்க முடிவெடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. அதன்காரணமாக தன்னிடம் புதிதாக கதை சொன்ன டைரக்டர்களிடம் அவர்கள் வைத்திருந்த ரொமான்ஸ், காமெடி காட்சிகளுக்கு முடிந்தவரை கத்தரி போட்டுள்ள விஜய் ஆண்டனி, ஆக்சன் காட்சிகளை அதிகப்படியாக கலந்து வருமாறு சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.