'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
டார்லிங் படத்தில் ஜி.வி.பிரகாசுடன் நடித்தபடி தமிழுக்கு என்ட்ரியானவர் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே பேயாக நடித்து அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய அவர், பின்னர் ஆதி, பாபி சிம்ஹா, விஷ்ணு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மீண்டும் ஆதி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோருடன் நடித்து வருபவர், லாரன்சுடன் மொட்ட சிவா கெட்ட சிவாவில் நடித்துள்ளார். இந்தபடம் அவரை முன்னணி நடிகையாக உயர்த்தும் என்று கூறப்படுகிறது.
மேலும், நடித்து வரும் படங்களில் பக்கா கமர்சியல் நாயகியாக கிட்டத்தட்ட தமன்னா ரேஞ்சுக்கு உருவெடுத்துள்ள நிக்கி கல்ராணி, இதன்பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கமர்சியல் வட்டம் உருவாகும் என்று எதிர்பார்ப்பதோடு, மேல் தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதுபற்றி நிக்கி கல்ராணி கூறுகையில், நான் எப்போதுமே நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகையாக திகழவே ஆசைப்படுகிறேன். அதனால் என்னிடம் ஒரு படநிறுவனம் கால்சீட் கேட்க வரும்போது, அதில் நடிக்கும் ஹீரோவைதான் முதலில் கேட்கிறேன். ஹீரோ நான் எதிர்பார்ப்பது போல் இருந்தால் அதன்பிறகே கதை கேட்டு கால்சீட் கொடுக்கிறேன் என்று கூறும் நிக்கி கல்ராணி, மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு பிறகு கோலிவுட்டில் நான் முன்னணி கமர்சியல் நடிகையாகி விடுவேன் என்றும் உரக்கச்சொல்கிறார்.