Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரமிற்கு வில்லன் ? பார்த்திபன் சம்மதிப்பாரா ?

10 பிப், 2017 - 17:50 IST
எழுத்தின் அளவு:
Did-Parthiban-accept-to-act-as-villain-for-Vikram

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம். 'சேது' படம் வெளிவருதற்கு முன்பு தனி ஹீரோவாக வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பிரபுதேவா, அப்பாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டும், தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் கிடைத்த வேடங்களில் நடித்துக் கொண்டும் இருந்தார். அப்படி அவர் சிறிய வேடத்தில் நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்து சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதையும் பெற்ற படம் பார்த்திபன் இயக்கி முதியவராக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படம் 'ஹவுஸ்புல்'. 99ம் வருடம் ஜனவரி 15ம் தேதி வெளிவந்த படம் 'ஹவுஸ்புல்'. அதே வருடத்தில் டிசம்பர் மாதம் 10ம் தேதி வெளிவந்த படம் 'சேது'. அந்தப் படத்திற்குப் பின் விக்ரம் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார்.


சுமார் 18 வருடங்கள் ஓடிவிட்டன. அப்போது இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றிருந்த பார்த்திபன் இப்போது தன்னுடைய இயக்கத்தில் மட்டுமல்லாமல் மற்றவர்களது இயக்கத்தில் வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரம் என நடித்து வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் வில்லனாக நடிக்க பார்த்திபனைக் கேட்டிருக்கிறார்களாம். அவர் இன்னும் சம்மதம் சொல்லவில்லை என்கிறார்கள். விக்ரமிற்கு வில்லனாக நடிக்க அவர் யோசிப்பாரா அல்லது சம்மதிப்பாரா என்ற சஸ்பென்ஸ் இன்னும் சில நாட்கள் வரை நீடிக்கும்.


இந்தப் படத்திற்காக முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட அனு இம்மானுவேல் மாற்றப்பட்டு இப்போது ரித்து வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால், பார்த்திபன் இந்தப் படத்தில் நடிக்க வந்த பிறகுதான் அது உண்மையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை கௌதம் மேனன் அவருடைய படங்களை வெளியிடுவதில் எவ்வளவு பொறுமையாக இருக்கிறாரோ அதுபோல் நாமும் இருக்க வேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in