இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'தெறி' படத்தை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'விஜய்-61' படத்தின் படபிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது. விஜய் நடித்த 'புலி' படத்தின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பாக தர்பார் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையைத்தாண்டி உள்ள உத்தண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இப்போது விஜய் நடித்து வரும் அவரது 61 ஆவது படத்தின் படப்பிடிப்பும் அதே ஸ்டுடியோவில்தான் நடைபெற்று வருகிறது.
இந்த ஸ்டுடியோவில் துவங்கிய படப்பிடிப்பு தொடர்ந்து பல வாரங்கள் நடைபெறவிருக்கிறது! 'ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் துணை நிறுவனமான 'ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.