பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியலில் சூழலில் திரைப்பிரபலங்களும் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி அவர்கள் கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர் சசிகலா முதல்வராக வரக்கூடாது என்று தான் கூறுகிறார்கள். அதேசமயம் பன்னீர் செல்வம் முதல்வராக தொடர ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான விசுவும் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது... ‛‛எங்க வாழ்க்கை உங்க கையில் இருக்கிறது எம்.எல்.ஏ.க்களே... கண்டிப்பாக முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிற்கு சப்போர்ட் செய்யுங்கள். சசிகலாவிற்கு சப்போர்ட் வேண்டாம். நான் ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியை நடத்திய போது ஒரே ஒரு தடவை மட்டும் தான் ஜெயலலிதாவைச் சந்தித்தேன். அதன் பிறகு என்னை சந்திக்க விடவில்லை. யார் யாரோ வருவார்கள். இப்போது சசிகலாவை ஆட்சி அமைக்க விட்டாலும் அதே தான் நடக்கும். முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கவர்னர் அனுமதி அளித்த நேரம் 5 மணி, 5 என்றால் பஞ்ச பூதங்கள் உள்பட நல்ல விஷயங்கள். அதுவே சசிகலாவுக்கு ஏழரை மணி, ஏழரை என்றால் என்ன என்று உங்களுக்கே தெரியும்”.
இவ்வாறு விசு கூறியுள்ளார்.