தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'இருமுகன்' படத்துக்கு முன்புவரை ஹீரோக்களின் ரேசில் பின்தங்கி இருந்தார் விக்ரம். இருமுகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுறுசுறுப்பாககிவிட்டார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வரும் விக்ரம், வாலு இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றிலும் நடித்து வருகிறார்.
விரைவில் தொடங்கப்பட உள்ள விஜய் சந்தர் இயக்கும் படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் கதாநாயகி யார் என்பதை இன்னும் இயக்குனர் கௌதம் மேனன் அறிவிக்காமலேயே உள்ளார். இத்தனைக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீஸரே வெளிவந்துவிட்டது.
அப்படியும்கூட, மலையாளப்பட நடிகை அனு இமானுவேல் விக்ரமுக்கு ஜோடியாக 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்கிறார் என செய்தி வெளியாகின. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அனு இமானுவேல் தற்போது படத்திலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், அனு இமானுவேலுக்குப் பதிலாக தெலுங்கு நடிகை ரீது வர்மா ஒப்பந்தப்பம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 'பெல்லிசூப்புலு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து அப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்தான் நடிகை ரீது வர்மா.
'துருவ நட்சத்திரம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ரீது வர்மா கலந்து கொள்வார் என்று கௌதம் மேனன் தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் பார்த்தபனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. துருவ நட்சத்திரம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.