'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அப்படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்கி வரும் படம் 'கவண்'. 'அனேகன்' படம் வணிகரீதியில் மாபெரும் தோல்வியடைந்தும் கூட கவண் படத்தை தயாரித்த நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. 'காதலும் கடந்து போகும்' படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த கவண் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இப்படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைத்துள்ளார். 'கவண்' படத்தின் பாடல்களை வருகிற 12-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக 'கவண்' படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்தபடத்தில் முதன்முதலாக கே.வி.ஆனந்தும், ஆதியும் இணைந்திருக்கின்றனர்.