ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக தற்போது சர்கார் 3 படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திலும் அமிதாப் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது. சர்கார் 3 படம் 2017-ம் ஆண்டு, மார்ச் 17-ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, சர்கார்-3 படம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. சர்கார் 3 படத்தை அலும்பரா என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் வேவ் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.