ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு பக்கம் அரசியல் நிலவரங்களால் பரபரப்பான சூழல் நிலவினாலும் இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இப்போதே காதலர்கள் தயாராகி வருகின்றனர்.. அந்தவகையில் சென்னையில் உள்ள தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் வரும் தினங்களில் களைகட்டப்போவது உண்மை.. இந்த கொண்டாட்டத்தில் காதலர்களை குஷிப்படுத்தும் விதமாக லுக்ஸ் சினிமாஸ் தியேட்டர் நிர்வாகமும் களம் இறங்கியுள்ளது..
கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களுக்கும் மிக முக்கியமான காதல் ஸ்பெஷல் படமாக மாறிப்போன 'பிரேமம்' படத்தை மீண்டும் சென்னையில் திரையிடுகிறார்கள்.. நாளை முதல் வரும் பிப்-16 வரை இந்தப்படம் திரையிடப்பட இருக்கிறதாம். இந்த தகவலை பிரேமம் நாயகன் நிவின்பாலி தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப்படம் கேரளாவை விட, தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு வருடத்திற்கும் அதிகமான நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.