மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் கமிட்டானபோது இனிமேல் லட்சுமிமேனனின் ஹீரோயினி மார்க்கெட் டவுனாகி விடும் என்று சொன்னார்கள். ஆனபோதும், அதன்பிறகு மிருதன், றெக்க படங்களில் அவர் நாயகியாக நடித்தார். அதையடுத்து ரேனிகுண்டா பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய சேதுபதி நடிக்கும் கருப்பன் படத்தில் நடிக்கவும் லட்சுமிமேனனை புக் பண்ண முடிவு செய்தனர். ஆனால், கடைசி நேரத்தில் றெக்க படம் வெற்றி பெறாத செண்டிமென்டை முன்வைத்து அவரை அந்த படத்தில் இருந்து நீக்கினர்.
மேலும், லட்சுமிமேனனின் காலில் அடி பட்டிருப்பதால் அவருக்குப்பதிலாக பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமான மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக அப்போது கூறினார்கள். இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று ரொம்பவே பீல் பண்ணினார் லட்சுமிமேனன். ஆனால் இந்த நேரத்தில் தேவி படத்தையடுத்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் யங் மங் சங் -என்ற படத்தில் லட்சுமிமேனன் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா குங்பு மாஸ்டர் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.