Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கௌதம் மேனன் மீது கடும் கோபத்தில் தனுஷ்

09 பிப், 2017 - 09:54 IST
எழுத்தின் அளவு:
dhanush-is-in-peak-anger-towards--director-gautham-menon

இன்றைய இளம் ரசிகர்கள் விரும்பும் இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர். காதல் படங்களையும், காதல் பாடல்களையும் அவர் படைக்கும் விதமே தனி என இளம் ரசிகர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கௌதம் மேனன் என்றாலே தயாரிப்பாளர்களுக்கும், அவரது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கும் பயம் வந்துவிடும். எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது. கௌதம் மேனனின் படங்கள் பிரச்சனைகள் எதையும் சந்திக்காமல் வெளிவந்தால் அது மிகப் பெரும் அதிசயமாகக் கூட இருக்கும்.


சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தை எப்படியோ தட்டுத் தடுமாறி கடந்த வருடம் வெளியிட்டுவிட்டார். ஆனால், தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை எப்போது முடித்து வெளியிடுவார் என்பது கௌதம் மேனனுக்கே தெரியுமா என்று தெரியாது என கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்கள்.


இன்னும் ஓரிரு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே அந்தப் படம் முடிவடையுமாம். அதன் பின் இறுதிக் கட்டப் பணிகள் என மேலும் சில மாதங்கள் இழுத்துவிடும் என்கிறார்கள். படம் ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பெயருக்கு படத்தின் டீசரை மட்டும் வெளியிட்டு விட்டு, படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற பரபரப்பை ஏற்படுத்திவிட்டு கௌதம் மேனன் 'துருவ நட்சத்திரம்' படத்தை இயக்கப் போய்விட்டார்.


தனுஷ் 'பவர் பாண்டி' படத்தை இயக்குவதிலும், 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிப்பதிலும் பிஸியாகிவிட்டார். தன் மனம் கவர்ந்த 'வட சென்னை' படத்தையே இதற்காக தள்ளி வைத்து அந்தப் படங்களின் வேலைகளைப் பார்த்து வருகிறார். கௌதமைப் பொறுத்தவரை 'துருவ நட்சத்திரம்' படத்தை உடனடியாக முடித்து ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார். தனுஷுக்கு 'பவர் பாண்டி'யும், கௌதமிற்கு 'துருவ நட்சத்திரம்' படமும்தான் இப்போதைக்கு முக்கியமாக உள்ளதாம்.


அதனால் 'எனை நோக்கி பாயும் தோட்டா' இன்னும் சில மாதங்களுக்குப் பாயவே பாயது என்கிறார்கள். தீபாவளிக்கு பொம்மைத் துப்பாக்கியில் இருந்து பட்டாசுகள் கூடப் பாயும். ஆனால், இந்தத் தோட்டா அப்போது கூடப் பாயாது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.


'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் தாமதத்திற்கு கௌதம் மேனன்தான் முக்கியக் காரணம் என தனுஷ் தரப்பில் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். சீக்கிரமே இதற்கான பஞ்சாயத்து நடக்கும் என்றும் தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in