'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛ஓ.பன்னீர்செல்வம் திறமையானவர்; அவர் முதல்வராக ஆட்சி புரிய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தொலைகாட்சி பேட்டியில் அவர் பேசியதாவது;
நான் பன்னீர்செல்வத்தின் நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல. ஓ.பன்னீர் செல்வம் திறமையற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் திறமையாக வெற்றி கண்டுள்ளார். அவர் மீண்டும் முதல்வராக ஆட்சி வர வேண்டும். ஜனநாயக ரீதியான எனது விருப்பம் இதுதான்.
சசிகலாவின் தகுதி பற்றி எனக்கு தெரியாது. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்தது கிடையாது. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடன் இருந்தார் என்பதை அரசியல் தகுதியாக கருத முடியாது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.இவ்வாறு அவர் பேசினார்.