Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீங்க!: ஜெய்

09 பிப், 2017 - 06:50 IST
எழுத்தின் அளவு:
do-not-ask-about-anjali

இசை குடும்பத்தில் இருந்து நடிகரானவர். அஜித்தைப் பின்பற்றும் கார் ரேஸ் பிரியர். நஸ்ரியா நட்பு, அஞ்சலி அன்பு, அடிக்கடி வெளிநாட்டு பயணம், படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை என்பது போன்ற பல வதந்திகள், இவரைப் பற்றி றெக்கைக் கட்டி பறக்கின்றன. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக, தொலைதுாரத்தில் இருந்த அவரை மடக்கி பிடித்தோம். 'வாட்ஸ் ஆப்' மூலம், உற்சாகமாக பேசினார் ஜெய்:


இசை குடும்பத்தில் இருந்து நடிகரானதில் சந்தோஷமா?


உண்மையாவே சந்தோஷமாக இருக்கிறது; ஆனாலும், இன்னும் இசையை விடவில்லை. ஷூட்டிங் முடிந்தால் வீடு வந்ததும், முதலில் தொடுவது, 'கீ போர்டை' தான். நேரம் கிடைக்கும்போது, ஒரு மணி நேரம் பயிற்சி செய்வேன். என்னிடம் பல இசை தொகுப்புகள் உள்ளன. கண்டிப்பாக, நானும் ஒரு நாள் இசை அமைப்பாளராக உருவெடுப்பேன்.


அடிக்கடி ஒரு நடிகையுடன், வெளிநாடு சென்று வருவதாக கூறப்படுகிறதே?


அடிக்கடி வெளிநாடு போவது உண்மை தான். கடந்தாண்டில், அமெரிக்கா, பிரிட்டன், மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர் சென்று வந்தேன். கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக தான், அங்கு சென்றேன். அதற்கான, விளம்பரதாரர்கள் அங்கு கிடைக்கின்றனர். தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் இருந்து, 'ரிலாக்ஸ்' பெறுவதற்காகவும் வெளிநாடு செல்கிறேன். சில இடங்களுக்கு தனியாகவும், சில இடங்களுக்கு நண்பர்களுடனும் செல்கிறேன். மற்றபடி, எந்த நடிகையுடனும் நான் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.


எனக்கு வாய்த்த அடிமைகள் அனுபவம்?


எனக்கு வாய்த்த அடிமைகள் டீமில் உள்ளவர்கள், என்னுடன் நெருங்கி பழகினர். இந்த கதை, எனக்கு வசதியாக இருந்தது. மொத்தம், 21 நாள், அந்த படத்தை எடுத்தனர். படப்பிடிப்பில் எல்லாரும் ஜாலியாக இருந்தனர். இந்த படத்தின் இயக்குனர், கண்டிப்பாக, மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார். அவரது இரண்டாவது படத்திலும், வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன். இந்த படத்துக்கு, பல தரப்பினரிடமிருந்தும் பாராட்டு வந்திருப்பது மகிழ்ச்சி.


அஞ்சலியுடன் கிசு கிசு வருவது பற்றி?


ஐயோ இந்த கேள்வியை மட்டும் விட்டுடலாமே; வேறு ஏதாவது கேள்வி கேளுங்களேன்... ப்ளீஸ்.


உங்கள் நண்பர்கள் பலருக்கும் திருமணமாகி விட்டது; உங்களுக்கு இந்தாண்டு எதிர்பார்க்கலாமா?


என்ன இப்படி கேட்டுட்டீங்க; விஷால், ஆர்யா, சிம்பு போன்ற நண்பர்களுக்கு எல்லாம், இன்னும் திருமணம் ஆகவில்லை. முக்கியமாக, என் நண்பன், பிரேம்ஜிக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு எல்லாம் திருமணம் முடிந்தபின் தான், எனக்கு திருமணமாகும்.ஒரு முன்னணி நடிகராக, என்னை நிலை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது; அதற்கு, கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. எனக்குள் இன்னும் நிறைய ஆசைகள் உள்ளன. எனவே, திருமணம் பற்றிய ஐடியாவே இல்லை. திருமணத்தை பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது.


மாற்றிக் கொள்ள நினைக்கும் கெட்ட பழக்கம்?


இப்போது நிலைமை மாறிவிட்டது. படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தால், வேறு காட்சிகளை எடுப்பார்கள். தொடர்ந்து தாமதமாக வந்தால், நமக்கு பதிலாக வேறு ஒரு நடிகர், நடித்துக் கொண்டிருப்பார். நான், இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். என்னால், எந்த படப்பிடிப்பும் தாமதமானது இல்லை. என்னை வைத்து இயக்கிவர்களிடமே இதை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனக்கு படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், மற்றவர்கள் நடிப்பதை பார்ப்பேன். அதுபோன்ற விஷயத்தை வேண்டுமானால், மாற்றி கொள்ளலாம்.


எந்த நடிகரை பின்பற்ற விரும்புகிறீர்கள்?


ரஜினி, கமல், கார்த்திக் ஆகியோர் என் மனம் கவர்ந்த நடிகர்கள். ரஜினி சார், அண்ணாமலையில், அப்பாவி பால்காரராக பின்னி பெடலெடுத்திருப்பார். அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதேபோல், கமல் சார் நடித்த, மைக்கேல் மதன காமராஜன் போல், நானும் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். அடுத்ததாக, கார்த்திக் சார் நடித்த, மவுனராகம் எப்போதுமே எனக்கு பிடித்த படம். சில காட்சிகளில் நடித்திருந்தாலும், செமத்தியாக நடித்திருப்பார். அவரது ஸ்டைலைப் பார்த்துத் தான், ராஜா ராணி படத்தில் நடித்தேன்.


படத்தின் இசை வெளியீடு, மீடியா சந்திப்பு என, எதற்குமே வருவது இல்லையே; ஏன்?


எனக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் தான் செய்வேன். மைக் முன்னாடி வந்து, 10 வார்த்தை பேசும்படி கூறினால், எனக்கு பேசத் தெரியாது. எனக்கு எப்போது வசதியாக இருக்கிறதோ, அப்போது, கண்டிப்பாக மைக் முன்னாடி வருவேன்.

Advertisement
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு வர வேண்டும்: கமல் ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு வர வேண்டும்: கமல்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in