‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கோலிவுட்டை கடந்து, மலையாள கரையோரத்திலும் கால் பதித்துள்ளதால், மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார் கன்னக்குழி அழகி, சிருஷ்டி டாங்கே. தர்மதுரை, அச்சமின்றி படத்தில், தன் நடிப்புக்கு கிடைத்த பாராட்டால், ஏற்கனவே சந்தோஷத்தில் இருந்த அவருக்கு, தற்போது, மோகன் லால் நடிக்கும் ஒரு படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில், அல்லு சிரிஷ் ஜோடியாக நடிக்கிறாராம் சிருஷ்டி. 'இந்தாண்டில், நான் நடித்த அரை டஜன் படங்கள், ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இப்போது, மலையாளத்திலும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், மேலும் பிசியாகி விடுவேன்' என, கூறி வருகிறார்.