'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து சுமார் 56 படங்களில் நடித்துள்ளார்கள்.. மீண்டும் இவர்களை இணைக்கும் விதமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரிடமும் ஒரு கதையை சொல்லியிருந்தார் கதாசிரியர் உதயகிருஷ்ணா.. ஆம்.. சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'புலி முருகன்' படத்தின் கதாசிரியரே தான். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகலாம் என்பதுதான் உதயகிருஷ்ணாவின் திட்டம்.. மம்முட்டி நடிக்க ஒப்புக்கொண்டதுடன் அந்தப்படத்தை தானே தயாரிப்பதாகவும் கூறினாராம்.
ஆனால் முதல் ஒகே சொன்ன மம்முட்டியோ, தற்போது அந்த கதையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். இத்தனைக்கும் உதயகிருஷ்ணா மீதும் எந்த வருத்தமும் இல்லை மம்முட்டிக்கு.. அவர்தானே மம்முட்டி நடிக்க இருக்கும் 'ராஜா-2' படத்திற்கும் கதை எழுதிகிறார். அதனால் மம்முட்டி தவிர்த்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.