‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட் மலையாளத்தில் இயக்கிவரும் படம் 'கம்மர சம்பவம்'.. திலீப் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில், இன்னொரு கதாநாயகனாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் சித்தார்த். இந்தப்படத்தில் திலீப் நாயகன் என்றாலும் சித்தார்த்துக்கும் மிக முக்கியமான வேடமாம். இன்னொரு முக்கிய விஷயம் இந்தப்படத்தில் பாபி சிம்ஹாவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிப்பதுதான்.
இசையமைப்பாளர் தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்தப்படம் மூன்றுவித காலகட்டத்தில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். அதில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் ஒன்று.. இந்த மூன்று காலகட்டங்களிலும் திலீப், சித்தார்த் இருவருமே இடம்பெறுகிறார்களாம். அதற்கேற்ற மாதிரி இவர்களது கெட்டப் மூன்றுவிதமாக மாற்றப்பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக திலீப் 64 வயது கிழவராக நடிக்கிறார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம்.