ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிச்சைக்காரன் புகழ் சாட்னா டைட்டஸ்க்கும், அப்படத்தை வெளியிட்ட கார்த்திக்கிற்கும் முறைப்படி திருமணம் சிறப்பாக நடந்தது. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகியிருந்தார் சாட்னா. சிலமாதங்களுக்கு முன்னர் பிச்சைக்காரன் படத்தை வெளியிட்ட கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கார்த்தியை, சாட்னா டைட்ஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். தன் மகளை ஆசைக்காட்டி எங்களிடமிருந்து கார்த்தி பிரித்துவிட்டார் என்று சாட்னாவின் அம்மா, மாயா கண்ணீர் மல்க கூறினார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கார்த்தியுடன் திருமணம் செய்ய நேரிட்டது என்று சாட்னாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கார்த்தி - சாட்னா திருமணம் முறைப்படி நடைபெற இருக்கிறது என்று இருவாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இருவீட்டாரது உறவினர்கள் முன்னிலையில் சாட்னா - கார்த்தி திருமணம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து பிப்., 10-ம் தேதி சென்னை, வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இதில் திரையுலகினரும், நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.