‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கோலிவுட்டையும் தாண்டி பாலிவுட்டிலும் வெற்றி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் மாதவன். கடைசியாக பாலிவுட்டில் சாலா கடூஸ்(இறுதிச்சுற்று ஹிந்தி ரீ-மேக்) படத்தில் நடித்திருந்தார். அடுத்தப்படியாக மாதவன் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். தோனி படத்தின் வெற்றிக்கு பிறகு சுசாந்த் சிங் ராஜ்புட், ‛சந்த மாமா டோர் கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். விண்வெளி சம்பந்தப்பட்ட கதையாக உருவாகும் இப்படத்தில் சுசாந்த் சிங், விண்வெளி வீரராக நடிக்கிறார். இந்தப்படத்தில் இப்போது மாதவனும் இணைந்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இதுப்பற்றி மாதவன் கூறியிருப்பதாவது... ‛‛என் மகனுடன் இந்தப்படத்தை காண ஆவலாய் உள்ளேன். அருமையான கதை, அற்புதமான அணி, படத்தில் நடிக்க நானும் ஆர்வமாய் உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
‛சந்த மாமா டோர் கீ' படம், ஜூன் அல்லது ஜூலையில் துவங்க உள்ளது, அடுத்தாண்டு குடியரசு தினமான ஜன., 26-ம் தேதி ரிலீஸாக உள்ளது.