ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். தற்போது இவர், இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா' படத்தின் இரண்டாம் பாகமான ‛ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார். வருண் ஜோடியாக ஜாக்குலின், டாப்சி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சாஜித் தயாரிக்கிறார். தற்போது படத்திற்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
நேற்று ஜூட்வா-2 படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியானது. இரண்டு என்ற நம்பரில் வருண், ஒருபுறம் பிரேம் - மற்றொருபுறம் ராஜா என்று இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். அதில், பிரேம் கேரக்டர் கோட்-சூட் எல்லாம் போட்டு ஒரு என்ஆர்ஐ., போன்று வருகிறார், மற்றொரு கேரக்டரான ராஜா, குறும்புக்கார விளையாட்டு பையன் போன்று வருகிறார். விரைவில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளது. ஜூட்வா-2 படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.