Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒருவழியாக திலீப் படத்தை இயக்க சம்மதித்தார் நாதிர்ஷா..!

07 பிப், 2017 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Nadhirsha-directing-Dileep-movie

மலையாள திரையுலகில் பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வந்த நடிகர் நாதிர்ஷா, கடந்த 2015ல் வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். ஒரு ஹீரோவுடன் நீண்டநாட்கள் பழக்கத்தில் இயக்குனர்களாக மாறும்போது தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள ஹீரோக்களைத்தான் தங்களது முதல் பட ஹீரோவாக கமிட் பண்ணுவார்கள். ஆனால் நாதிர்ஷாவோ தனது முதல் படத்தில் தனது நீண்டநாள் நண்பரான திலீப்பை விட்டுவிட்டு, பிருத்விராஜையும், ஜெயசூர்யாவையும் ஹீரோவாக்கினார். படமும் ஹிட்டானது.


அந்த சமயத்தில் திலீப்பை இயக்காததற்கு காரணம் அவருக்கான கதை தன்னிடத்தில் இல்லை என்பதுடன் தனது முதல் படம் நல்ல வெற்றியை பெற்றால் அவரது அடுத்த படம் திலீப்புக்குத்தான் என்றும் கூறினார். ஆனால் அடுத்த படத்திற்கு கதாசிரியராக தன்னுடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு உன்னிகிருஷ்ணனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கட்டப்பனயிலே ரித்விக்ரோஷன் என்கிற படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்து அதையும் ஹிட்டாக்கினார் நாதிர்ஷா. ஆனால் அவர் சொன்னபடி இரண்டாம் படம் திலீப்புக்குத்தான் போனது. ஆம். அந்தப்படத்தை தயாரித்தவர் திலீப் தான்..


அடுத்ததாக நாதிர்ஷா மம்முட்டியை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார் என்றுதான் இப்போது பரவலான பேச்சு அடிபடுகிறது. நாதிர்ஷாவும் அதை சூசகமாக உணர்த்தியும் உள்ளார். அப்படியானால் இரண்டு ஹிட்டுகளை கொடுத்துவிட்டு இன்னும் திலீப்பை இயக்காதது ஏன் என கேட்பவர்களுக்கு திலீப் படத்தை முடித்ததும் அடுத்ததாக மம்முட்டி படத்தை இயக்கப்போவதாக உறுதி கூறியுள்ளாராம் நாதிர்ஷா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in