Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யார் இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது: டேனியல் பாலாஜி

07 பிப், 2017 - 11:01 IST
எழுத்தின் அளவு:
No-one-catch-others-place-says-Daniel-Balaji

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா என பல படங்களில் வில்லத்தனமான வேடங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. தற்போது வடசென்னை, மாயவன், இப்படை வெள்ளும், சதுரங்கவேட்டை-2, வணங்காமுடி என பல படங்களில் நடித்து வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் ஒரு மினி பேட்டி...


* உங்களது கேரக்டர் செலக்சன் பற்றி சொல்லுங்கள்?


நான் சினிமாவில் வில்லன் நடிகர் என்கிற முத்திரையில் இருந்தபோதும், எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையாக உள்ளது. அதோடு, நெகட்டிவ் வேடம் மட்டுமின்றி, குணசித்ரம் மற்றும் செண்டிமென்ட் வேடங்களிலும் நடித்திருக்கிறேன். மேலும் நான் நடிக்கும் எந்தவொரு வேடமாக இருந்தாலும் கதை கேட்கும்போது என்னை டச் பண்ண வேண்டும். நான் நடித்த பிறகு ரசிகர்களை அந்த கேரக்டர் டச் பண்ண வேண்டும். அது பாசிட்டிவ், நெகட்டிவ் என எதுவாக இருந்தாலும் இந்த விசயங்களை மனதில் கொண்டு தான் கேரக்டர்களை நான் செலக்ட் பண்ணி வருகிறேன்.


* தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜின் வில்லன் இடம் காலியாகி விட்டதே. அதை பிடிக்க முயற்சிப்பீர்களா?


அவர் இடம் காலியாகவில்லை. இப்போதும் அவர் பல படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். மேலும், நான் யார் இடத்தையும் பிடிக்கவோ, யாரையும் பின்பற்றுவதோ இல்லை. எனக்கென ஒரு பாணி வைத்து நடிக்கிறேன். அதனால்தான் எனது நடிப்பில் யாருடைய சாயலும் இல்லாமல் இருக்கிறது. முக்கியமாக, யார் இடத்தையும் யாரும் பிடிக்க முடியாது.


* ஹீரோவாக நடிப்பீர்களா?


என்னைப்பொறுத்தவரை ஹீரோ, வில்லன் என்கிற பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை. எல்லாம் ஒவ்வொரு வகையான கேரக்டர்கள். அந்தவகையில் நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. காரணம், இப்படித்தான் என்றில்லாமல் எல்லாவிதமான வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும். குறிப்பாக கண்கலங்க வைக்கும் வேடங்களிலும் நடிப்பேன். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வடசென்னை படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. ஒரு வித்தியாசமான கேரக்டரில்தான் நடிக்கிறேன். என்னை எல்லாவிதமான கேரக்டர்களிலும் டைரக்டர்கள் நடிக்க வைக்கிறார்கள்.


* விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி?


நல்ல அனுபவம்தான். சாதாரணமாக இருப்பார். கேமரா முன்பு வந்துவிட்டால் கதாபாத்திரமாகி விடுவார். அவரது நடனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டுமின்றி ஒவ்வொரு ஹீரோக்களிடமுமே ஒவ்வொரு தனித்துவம் உள்ளது. மேலும், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை. வருடம் ஓரிரு படங்களில் நடித்து வந்த நான், கடந்த ஆண்டு தான் 6 படங்களில் நடித்தேன். எனக்கு பிடித்தமான படங்களாக வந்ததால் நடித்தேன். அதோடு, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறேன் என்கிறார் டேனியேல் பாலாஜி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in