Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லண்டன் பேயாக நடிக்கும் த்ரிஷா!

07 பிப், 2017 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Trisha-acting-as-London-devil

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை-2 படத்தில் பேயாக நடித்தவர் த்ரிஷா. அதன்பிறகு நாயகி என்ற படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தவர், தற்போது மோகினி, சதுரங்கவேட்டை-2, கர்ஜனை, 1818 என பல படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இதில் எந்த படத்திலும் அவர் டூயட் பாடும் நாயகியாக நடிக்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.


இதில், மாதேஷ் இயக்கத்தில் நடித்துள்ள மோகினி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. கதைப்படி, சமையல் கலை வல்லுனரான த்ரிஷா தமிழகத்தில் இருந்து ஒரு டீமுடன் லண்டன் செல்வாராம். அங்கே போன இடத்தில் ஒரு பேய் அவரை அட்டாக் பண்ணுமாம். அந்த பேயும் த்ரிஷாதானாம். அவர் யார், எதற்காக இந்த த்ரிஷாவை அட்டாக் பண்ணுகிறார் என்பது தான் மோகினி படத்தின் கதையாம்.


அதோடு, அரண்மனை-2 படத்தில் நடித்த த்ரிஷாவை விட இந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா, பேய் கெட்டப்பில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். குறிப்பாக த்ரிஷாவை மிரட்டல் பேயாக காட்ட வேண்டும் என்பதற்காக சில கோடிகளை கொட்டி கிராபிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார் டைரக்டர் மாதேஷ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in