இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகராக அறிமுகமான விஷ்ணுவிஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்து இப்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். தனது முதல் தயாரிப்பாக ‛விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' சார்பில் ‛வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் நடிகராகவும், தயாரிப்பாளராகாவும் வெற்றி கண்டார் விஷ்ணு விஷால்.
இந்த படத்தை தொடர்ந்து இப்போது தனது இரண்டாவது தயாரிப்பாக 'கதாநாயகன்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் 'கதாநாயகன்' படத்தில் விஷ்ணு விஷாலுடன் கதாநாயகியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார். கதாநாயகன் படம் முடிவடையும் முன்பே, தனது மூன்றாவது பட தயாரிப்பு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தில் பணியாற்றிய செல்லா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கெசன்ட்ரா நடிக்கிறார்! இந்த தகவலை ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார் விஷ்ணு விஷால்!