ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கதகளி, மருது, கத்தி சண்டை என தொடர்ந்து ப்ளாப் படங்களைக் கொடுத்து வரும் விஷால், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். கத்தி சண்டை படத்தை தயாரித்த பட நிறுவனமே துப்பறிவாளன் படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தை தொடர்ந்து 'இரும்புத்திரை' படத்தில் நடிக்கிறார் விஷால். அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆர்யா இப்படத்திலிருந்து விலகிவிட்டதால் இப்போது அவருக்கு பதிலாக அர்ஜுன் நடிக்கவிருக்கிறார். அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் விஷால். தனது குரு என்பதால் அர்ஜூனுக்கு கணிசமான தொகையையும் சம்பளமாக கொடுத்திருக்கிறாராம் விஷால். விஷாலின், 'விஷால் ஃபிலிம் பேக்டரி' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.