ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரும் படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகிவிடும். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் என்பதாலோ என்னவோ கூடுதல் சிரத்தைகள் எடுத்து மணிரத்னம் படத்துக்கான பாடல்களை செதுக்கிக் கொடுப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்! இதற்கு மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடிக்கும் 'காற்று வெளியிடை' படத்தின் பாடல்களும் விதிவிலக்கில்லை.
அந்தப்படத்திலிருந்து கடந்த வாரம் வெளியான 'அழகியே...' என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு யு டியூபில் வெளியான இந்தப் பாடலுக்கு இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ் கிடைத்துள்ளன. இந்தப்பாடலைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் 'காற்று வெளியிடை' படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு பாடலும் வெளியாக உள்ளது.
அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'வான்...' என்று தொடங்கும் பாடலை காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிட உள்ளனர். காதலர் தினத்தன்று வெளியாவதால் நிச்சயமாக இளைஞர்களுக்கு பிடித்தமான பாடலாகத்தான் இருக்கும் என்று சொல்லணுமா என்ன?
இதிலும் மணிரத்னத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டால் படமும் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது மணிரத்னம் வட்டாரம்.