இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பலான காஸி இந்திய ராணுவத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இதை மையமாக கொண்டு உருவாகி வருகிற படம் காஸி. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் இந்தப் படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. சங்கல்ப் என்ற புதுமுகம் இயக்குகிறார். ராணா, டாப்ஸி, நாசர், கே.கே.மேனன், அதுல்குல்கர்னி, ரகுல்சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் மறைந்த இந்தி நடிகர் ஓம்பூரி நடித்துள்ள கடைசி படம் இது. மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே இசை அமைத்துள்ளார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு போர்களத்தை மையமாக கொண்ட படமாக காஸி வெளிவருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய கப்பல் படையை பெருமைபடுத்தும் விதமாக கடற்படை தினத்தன்று வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.