ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை சாய்ரமணி இயக்கி உள்ளார். அம்ரீஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை ராகவா லாரன்சுடன் மெரீனா பீச்சில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், மாணவர்களும் இணைந்து வெளியிட்டார்கள்.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, பெப்சி தலைவர் ஜி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகைகள் ஜெயசித்ரா, நிக்கி கல்ராணி, ராய் லட்சுமி, கோவை சரளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மெரீனா புரட்சியில் கலந்து கொண்ட விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டிருப்பது எனக்கு மிகப்பெரிய கவுரவம், இதனை நான் பெருமையாக கருதுகிறேன். பல தடைகளுக்கு பிறகு இந்தப் படம் வெளிவருகிறது. எனது வழக்கமான காமெடி படங்களிலிருந்து மாறுபட்ட மாஸ் படமாக இது இருக்கும்" என்றார் ராகவா லாரன்ஸ்.