Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலகல் ஏன்.?

06 பிப், 2017 - 12:55 IST
எழுத்தின் அளவு:
Jyothika-out-in-Vijay-film?

'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் - இயக்குனர் அட்லீ இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதிகா தெரிவித்துள்ளார். அதனால், கடும் அதிர்ச்சியடைந்த படக் குழுவினர் உடனடியாக வேறு ஒருவரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.


கதையைக் கேட்டு சம்மதித்து, கதாபாத்திரம் சம்பந்தமாக, பயன்படுத்தும் ஆடைகள் உட்பட அனைத்து விதமான விவாதங்களையும் ஜோதிகா முடித்துள்ள நிலையில் அவரது திடீர் விலகல் ஏன் என்பதை படக்குழுவினர் இதுவரை அறிவிக்கவில்லை. ஜோதிகா போன்ற சீனியர் ஹீரோயின் யாரும் இப்போது தமிழ் சினிமாவில் இல்லை. அதனால் அவருக்குப் பதிலாக பொருத்தமான வேறு ஒருவரைத் தேடிப் பிடிப்பது எளிதான விஷயமில்லை. அதிலும் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்தாகிவிட்டது என படக் குழுவினர் கடுப்பாகவே உள்ளார்களாம்.


'36 வயதினலே' படத்திற்குப் பிறகு ஜோதிகா நாயகியாக நடித்துள்ள 'மகளிர் மட்டும்' படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விஜய் படத்தில் ஜோதிகா திடீரென நடிக்க மறுத்ததற்குக் காரணம் சில குடும்ப நெருக்கடிகள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.


கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு பூஜை எல்லாம் போட்ட பின் சூர்யா நடிக்க மறுத்ததும், அந்தப் படத்தில் தற்போது விக்ரம் நாயகனாக நடித்து வருவதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கடைசி நேரத்தில் ஜோதிகா விலகியது குறித்து விஜய் தான் அதிகம் வருத்தப்பட்டார் என்கிறார்கள். விஜய் - ஜோதிகா இணைந்து நடித்த 'குஷி, திருமலை' இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in