ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ஒருவர் கையாண்டால் அதே போலவே தொடர்ந்து சிலரும் அப்படியான கதைக் களத்தைக் கொண்ட படங்களையே எடுக்க ஆரம்பிப்பார்கள். 'மஞ்சப் பை' படத்தை இயக்கிய ராகவா, ஆர்யா, கேத்தரின் தெரேசா நடிக்கும் 'கடம்பன்' என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் காட்டில் வசிக்கும் இளைஞராக ஆர்யா நடிக்கிறார். காடும், காடைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. அதே போல வியட்நாம் நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் இப்படத்தை படமாக்கியுள்ளார்கள். இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்போது அந்தப் படம் போலவே காட்டை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்குனர் விஜய் எடுத்து வருகிறார். 'வன மகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா சைகல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படமும் காடும், காடைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடக்கும் கதைதான் என இயக்குனர் விஜய் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பையும் வியட்நாம், கம்போடியா காடுகளில் நடத்தியுள்ளார்கள்.
'கடம்பன்' படத்தின் முதல் பார்வை மற்றும் டீசரில் ஆர்யாவின் தோற்றத்தைப் பார்த்த பலரும் அவர் 'டார்ஜான்' போல இருக்கிறார் என வாழ்த்துத் தெரிவித்தார்கள். இப்போது வெளிவந்துள்ள 'வனமகன்' படத்தின் முதல் பார்வையிலும் ஜெயம் ரவி, ஆர்யா போலவே 'டார்ஜான்' தோற்றத்தில்தான் இருக்கிறார். இரண்டு படமும் ஒரே கதையா அல்லது எந்த ஹாலிவுட், கொரியன் படத்தின் தழுவல் என இப்போதே ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.