'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்டன்ட் நடிகராக இருந்து வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்திற்கு பிறகு காமெடியனாக உருவெடுத்த அவர், தற்போது முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருக்கிறார். சில படங்களின் போஸ்டர்களில் அவரை முன்னிறுத்தியே விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தனக்கு பிறகு மார்க்கெட்டிற்கு வந்த வளர்ந்து வரும் காமெடியன்களை அவர் போட்டியாக நினைப்பதில்லை. தனது படங்களில் அவர்களுக்கு சிபாரிசு செய்கிறார்.
குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்தபோது, அதே படத்தில் இன்னொரு காமெடியனாக நடித்த யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்களாம். அதனால், பின்னர் தான் நடிக்கும் புதிய படங்களுக்கு இன்னொரு காமெடியன் தேவைப்பட்டால் யோகிபாபுவுக்குத்தான் சிபாரிசு செய்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். அவரைப்பார்த்து இப்போது தான் நடிக்கும் படங்களுக்கு இன்னொரு காமெடியன் தேவை என்றால் ராஜேந்திரனுக்கு சிபாரிசு செய்கிறாராம் யோகிபாபு. அந்தவகையில், இவர்கள் இருவரும் கோலிவுட்டில் எந்தவித ஈகோவும் இல்லாத காமெடியன்களாக திகழ்கிறார்கள்.