தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுசீந்திரன் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்தவர் அப்புக்குட்டி. அதையடுத்து மன்னாரு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கிய அப்புக்குட்டி, தனக்கு போட்டோ செஷன் நடத்தி தனது கெட்டப்பையே மாற்றிய நடிகர் அஜீத்குமார், தனது பெயரை சிவபாலன் அப்புக்குட்டி என்று மாற்றி வைத்த பிறகு புது எனர்ஜியுடன் மீண்டும் நாயகனாக காகித கப்பல் என்ற படத்தில் நடித்தார். அதோடு அந்த படத்தில் அஜீத் சொன்ன கருத்துக்களை மையமாக வைத்து ஒரு பாடலும் பாடி நடித்தார்.
ஆனால், அவர் பெரிதாக எதிர்பார்த்த அந்த படம் வெற்றி பெறவிலலை. இருப்பினும் தற்போது வெட்டிப்பசங்க, கூட்டாளி போன்ற படங்களில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார் அப்புக்குட்டி. மேலும், இந்த படங்களில் அவர் மட்டுமே சிங்கிள் ஹீரோவாக இல்லாமல் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இதில், கூட்டாளி படத்தில் பிரியாணி கடை மாஸ்டராகவும், வெட்டிப்பசங்க படத்தில் பேயைப்பார்த்து பயந்து பயந்து வாழும் ஒரு வேடத்திலும் நடிக்கிறாராம்.