ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணி, அந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்து மிரட்டினார். அதையடுத்து, யாகவராயினும் நாகாக்க, கோ-2, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது லாரன்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் இம்மாதம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படம் குறித்து கோலிவுட் நண்பர்களிடத்தில் தான் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருப்பதாக கூறி வருகிறார் நிக்கி கல்ராணி.
அதாவது, இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் இளசுகளை கவரும் வகையிலான கிளுகிளுப்பான பர்பாமென்ஸ் நிறையவே கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நடனத்தில் இதுவரையில்லாத வகையில் புயலாக ஆடியிருக்கிறேன். அதற்கு காரணம் லாரன்ஸ்தான். அவர்தான் நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னை நடனமாட வைத்தார். விளைவு, இனிமேல் எந்தமாதிரியான நடனங்களையும் என்னால் ஆட முடியும் என்கிற நம்பிக்கை இப்போது ஏற்பட்டிருக்கிறது என்கிறாராம்.