மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அஜீத் நடித்த சில படங்களின் சண்டை காட்சிகளின்போது ரிஸ்க்கான ஷாட்களை படமாக்கும்போது அவரே நடித்தார். அதில் டூப் நடிகர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று டைரக்டர்கள் சொல்லும்போது, கஷ்டப்படு வது அவர்கள், பெயர் வாங்குவது நானா -என்று சொல்லி தானே ரிஸ்க்கான காட்சிகளிலும் நடித்தார் அஜீத். அப்படி அவர் நடித்ததின் காரணமாக பலமுறை விபத்துக்களில் சிக்கி அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இப்படி பலமுறை உடம்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டபோதும் தற்போது அவர் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ்பேக் கெட்டப்பில் காட்சி கொடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அதேசமயம், இது ஒரு ஹாலிவுட் பட போஸ்டர் சாயலில் உள்ளது. இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலை செய்து அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர் என்பது போன்ற விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் இதுபோன்ற விசயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்துள்ளது விவேகம் டீம். அதன்காரணமாக, தினமும் 5 மணி நேரம் வரை அஜீத் ஒர்க்அவுட் செய்த அந்த வீடியோவை விரைவில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். இந்த தகவல் வெளியானதை அடுத்து அஜீத் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.