மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் டைகர் தங்கதுரை. இவருக்கும், சாப்ட்வேர் இஞ்சினியர் அருணாவுக்கும் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் 7.30க்குள் சென்னை பாடி லூகாஸில் உள்ள மோகன் டவர் வெங்கட் சேஷ்மகாலில் திருமணம் நடைபெற்றது.
டைகர் தங்கதுரை சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் தற்போது பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருவதால், அவரை ஏராளமான சினிமா-சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தினர். குறிப்பாக, விஜயசேதுபதி, நக்கீரன் கோபால், பாபி சிம்ஹா, அட்டகத்தி தினேஷ், கஞ்சாகருப்பு, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, லொள்ளு சபா ஜீவா, காளி வெங்கட், பாலசரவணன், ராமதாஸ், ரமேஷ்திலக், பிரஜன், அசார், வடிவேலு பாலாஜி, ஆதித்யா சேனல் ஆதவன், ஹரி விஷ்வந்த், ரியோ, ஸ்டன்ட் தீனா, மிமிக்ரி சேது, இயக்குனர்கள் நலன்குமாரசாமி, ரவிக்குமார் உள்பட பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும், டைரக்டர் வெற்றிமாறன், நடிகர் யோகிபாபு ஆகியோர் வெளியூரில் இருந்ததால் போனில் வாழ்த்தியுள்ளனர்.
மேலும், பிரபலமான திரைக்கலைஞர்கள் மணமக்கள் டைகர் தங்கதுரை-அருணாவை வாழ்த்த சென்றதையடுத்து, திருமணம் நடைபெற்ற மண்டபத்தை நோக்கி ஏராளமான பொது மக்கள் திரண்டனர். இதனால் அந்த ஏரியாவில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.